Iratham Kaayam Kuthum – இரத்தம் காயம் குத்தும்

Tamil Christian Songs Lyrics

Artist: Sarah Martin
Album: Good Friday

Iratham Kaayam Kuthum Lyrics In Tamil

இரத்தம் காயம் குத்தும்
நிறைந்து நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும்
சூடுண்ட சிரசே
முன் கன மேன்மை கொண்ட
நீலச்சை காண்பானேன்
ஐயோ வதைந்து நொந்த
உன்முன் பணிகிறேன்

1. நீர் பட்ட வாதை யாவும்
என் பாவப் பாரமே
இத்தீங்கும் நோவும் சாவும்
என் குற்றம் கர்த்தரே
இதோ நான் என்றுஞ் சாக
நேரஸ்தன் என்கிறேன்
ஆனாலும் நீர் அன்பாக
என்னைக் கண்ணோக்குமேன்

2. நீர் என்னை உமதாடாய்
அறியும் மேய்ப்பரே
முன் ஜீவன் ஊறும் ஆறாய்
என் தாகம் தீர்த்தீரே
நீர் என்னைப் போதிப்பிக்க
அமிர்தம் உண்டேனே
நீர் தேற்றரவளிக்க
பேரின்பமாயிற்றே

3. உம்மண்டை இங்கே நிற்பேன்
என்மேல் இரங்குமேன்
விண்ணப்பத்தில் தரிப்பேன்
என் கர்த்தரை விடேன்
இதோ நான் உம்மைப் பற்றி
கண்ணீர் விட்டண்டினேன்
மரிக்கும் உம்மைக் கட்டி
அணைத்துக் கொள்ளுவேன்

4. என் ஏழை மனதுக்கு
நீர் பாடுபட்டதே
மகா சந்தோஷத்துக்கு
பலிக்கும் மீட்பரே
என் ஜீவனே நான் கூடி
இச்சிலுவையிலே
உம்மோடென் கண்ணை மூடி
மரித்தால் நன்மையே

5. நான் உம்மைத் தாழ்மையாக
வணங்கி நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக
துதிப்பேன் இயேசுவே
நான் உம்மில் ஊன்றி நிற்க
சகாயராயிரும்
நான் உம்மிலே மரிக்க
கடாட்சித் தருளும்

6. என் மூச்சொடுங்கும் அந்த
கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த
ரூபாகக் காண்பியும்
அப்போ நான் உம்மைப்பார்த்து
கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு சாய்ந்து
தூங்குவேன் இயேசுவே

Watch Online

Iratham Kaayam Kuthum MP3 Song

Iratham Kaayam Lyrics In English

Iraththam Kaayam Kuththum
Nirainthu Ninthaikkae
Mul Kiriidaththaalae Sutrum
Sutunda Chirachae
Mun Kana Maenmai Konda
Niilachchai Kaanpaanaen
Aiyoa Vathainthu Nontha
Unmun Panikiraen

1. Neer Patda Vaathai Yaavum
En Paavap Paaramae
Iththiingkum Noavum Chaavum
En Kutram Karththarae
Ithoa Naan Enrugn Chaaka
Naerasthan Enkiraen
Aanaalum Niir Anpaaka
Ennaik Kannoakkumaen

2. Niir Ennai Umathaadaay
Ariyum Maeypparae
Mun Jiivan Uurum Aaraay
En Thaakam Thiirththiirae
Niir Ennai Poathippikka
Amirtham Untaenae
Niir Thaerraravalikka
Paerinpamaayirrae

3. Ummantai Ingkae Nirpaen
Enmael Irangkumaen
Vinnappaththil Tharippaen
En Karththarai Vitaen
Ithoa Nhaan Ummaip Parri
Kanniir Vitdantinaen
Marikkum Ummaik Katti
Anaiththuk Kolluvaen

4. En Aezhai Manathukku
Niir Paatupatdathae
Makaa Chanthoashathukku
Palikkum Miitparae
En Jiivanae Naan Kuuti
Ichchiluvaiyilae
Ummoaten Kannai Muuti
Mariththaal Nanmaiyae

5. Naan Ummaith Thaazhmaiyaaka
Vanangki Niththamae
Niir Patda Kasthikkaaka
Thuthippaen Iyaechuvae
Naan Ummil Uunri Nirka
Chakaayaraayirum
Nhaan Ummilae Marikka
Kadaatchith Tharulum

6. En Muchchotungkum Antha
Katai Ikkattilum
Niir Enakkaay Iranhtha
Ruupaakak Kaanpiyum
Appoa Naan Ummaippaarthu
Kannoakki Negnchilae
Anaithukkontu Chaaynthu
Thungkuvaen Iyaechuvae

Song Description :
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, yesu songs, Iratham Kaayam Kuthum, Jesus new songs, Kalvary Songs, Jesus video songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =